" "" "

மகளின் திருமணம் இரண்டாவது முறையும் நின்றுவிடுமோ என்ற பயந்தில் தந்தை செய்த செயல்.! மகிழ்ச்சியில் குதித்த மகள்.! இப்படி ஒரு தந்தை கிடைத்த மகள் வரம் பெற்றவர் தான்..என்ன செய்திருக்கார் பாருங்கள்.!!

மகளின் திருமணம் ஒருமுறை நின்று போன நிலையில் மறுபடியும் நின்று போனால் மகளது மனம் நொந்து போகும் என நினைத்து தந்தை ஒருவர் செய்த செயல் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுவருகின்றது. கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள தகழியை சேர்ந்தவர் ஆதிரா. இவரது பெற்றோர் செங்கனூரைச் சேர்ந்த அகிலு என்பவருக்கு இவரை திருமண நிச்சயம் செய்தனர்.

அத்துடன் இந்த வருடம் 3ம் மாதம் இவர்களுக்கு திருமணம் செய்ய நாள் குறிக்கப் பட்டிருந்த நிலையில் திருமணம் செய்ய முடியாமல் போனது, கொரோனா இவர்களின் பகுதியில் அதிகரித்ததால் திருமண திகதியை இந்த மாதம் தள்ளி வைத்தனர். ஆனால் கேரளாவை வெள்ளம் புரட்டி போட ஆதிராவின் வீட்டிற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் ஆதிரா சோர்வாக காணப்பட்டார்.

இதனை பார்த்த அவரது தந்தையால் தாங்க முடியவில்லை, அதனால் மணமகன் வீட்டாருடன் பேசி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். படகு ஒன்றை வாடகைக்கு எடுத்த தந்தை அதனை பூக்களால் அழகாக்கி வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அதில் தனது மகளை அழகாக எடுத்துள்ளார்.

இரண்டு குடும்பங்களும் முக்கிய உறவினர்களும் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்ட நிலையில் கொரோனா விதிகளுக்கு அமைவாக அழகாக திருமணத்தை நடத்திமுடித்துள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.!!