இந்தியாவில் இறந்ததாக கூறப்பட்ட ஒருவர் மீண்டும் உயிர்பித்த அதிசயம்..!!

இந்தியா மத்திய பிரதேசத்தில் வசிக்கும் காசிராம்(72) எனும் முதியவரை சிகிச்சைக்காக மத்திய பிரதேசம் சாகர் மாவட்டத்தின் அமைந்துள்ள அரசு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டர். பின்பு சிகிச்சையும் நல்லமுறையில் அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

உயிரிழந்ததாக கூறப்பட்ட காசிராமின் உடலை மறுநாள் பிரேத பரிசோதனை செய்ய ஆய்வுக்கூடத்திற்கு மருத்துவர்கள் அனுப்பி உள்ளனர். அங்கு காசிராமின் கால்கள் அசைந்துள்ளன. இதை பார்த்த வைத்தியசாலை பிரேத பரிசோதனை ஆய்வுக்கூட ஆய்வாளர் உடனடியாக மருத்துவர்களுக்கு செய்தி தெரிவித்தார். அதனை அறிந்த மருத்துவர்கள் அங்கு வந்து காசிராமின் சோதித்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

காசிராம் இறக்கவில்லை அவர் உயிருடன் தான் இருக்கிறார் என தெரிய வந்தது. இது குறித்து அந்த அரசு வைத்தியசாலை தலைமை மருத்துவர் ரோஷன் தெரிவிக்கையில், ‘காசிராம் உயிரிழந்ததாக கூறப்பட்டது. . ஆனால், அவர் உயிரோடு இருப்பது மறுநாள் தெரிய வந்துள்ளது. வேலையின் போது கவனயீனமாக செயற்பட்ட மருத்துவர்கள் பற்றியும், அவர்களின் செயல்பாடுகள் பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார். இதனை அறிந்த காசிராமின் உறவினர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.