ரஞ்சனின் உரையாடல்: விசாரணையை ஆரம்பித்தது குற்றவியல் பிரிவு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகள் தொடர்பில் குற்றவியல் பிரிவினரால் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது பல்வேறு பொருட்கள் பொலிஸாரிடம் சிக்கிய நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலையானார்.

இந்நிலையில், அவர் பலருடன் உரையாடிய தொலைபேசி உரையாடல்கள் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், அந்த உரையாடல்கள் குறித்து குற்றவியல் பிரிவினரால் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

குறித்த குரல் பதிவுகள் குறித்து பொலிஸ், நீதிமன்ற சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டதையடுத்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.