காதலர் தினத்தை முன்னிட்டு யாழில் திறக்கப்பட்டுள்ள கடை.! பெற்றோர் கடும் எதிர்ப்பு..!!

யாழில் பிரபல பாடசாலைக்கு அருகில் காதலர் தினத்தை முன்னிட்டு திறக்கப்பட்டுள்ள கடைக்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாநகர சபைக்கு எதிராக மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். பாடசாலைக்கு அருகில் தற்காலிக கூடாரம் அமைத்து இந்த கடைகள் திக்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து காதலர் தினத்திற்காக பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பாடசாலை மாணவர்களை மனதை பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த கடைத் தொகுதிகளுக்கு, மாநகர சபைக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் . இந்த கடைகளில் மாணவர்கள் காதலர் தின பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஆரம்பித்ததனை தொடர்ந்து யாழ்ப்பாண மாநகர சபைக்கு இது தொடர்பில் மக்கள் தகவல் வழங்கியுள்ளனர். இருப்பினும் குறித்த கடைகைளை அகற்றுவதற்கு யாழ். மாநாகர சபை நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் மக்கள் கோபமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.