சமல் ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது..!!

இலங்கையின் சமகால ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் சகோதரரான அமைச்சர் சமல் ராஜபக்ஷவை கொலை செய்யப்போவதாக அவருடைய கைபேசிக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இராஜகிரிய பிரதேசத்தில் வைத்து இந்த நபர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அமைச்சரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்போவதாக குறுந்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

மேலும் இது தொடர்பாக கொழும்பு குற்றவியல் பிரிவினரால் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக தெரியவந்துள்ளது. அதற்கு முன்னர் இந்த நபரால் இது போன்ற குறுந்தகவல்கள் வேறு நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றவியல் பிரிவினரால் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்த சந்தேகநபர் தற்போதைய நிலையில் தடுப்பு உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றவியல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.