" "" "

கொரோனா வார்ட்டில் இருக்கும் தந்தைக்காக கழிவறை கழுவி கோடீஸ்வர இளைஞர் செய்த செயல்.! சிகிச்சை பலனின்றி இறந்து போன தந்தை.!!

தந்தைக்காக கோடீஸ்வர மகன் ஒருவர் கழிவறை சுத்தம் செய்ததுடன் நோயாளிகளின் கழிவுகள் அகற்றி கொரோனா வார்ட்டில் பணிபுரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த மிகப் பெரிய தொழிலதிபர் சுரேஷ் பிரசாத். இவருக்கு திடீரென காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டது.

சுரேஷ் பிரசாத்திற்கு செய்யப் பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப் பட்டது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (டிஆர்டிஓ) தற்காலிக கொரோனா வார்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த கொரோனா வார்ட்டில் கட்டுப் பாடுகள் அதிகம். வெளியே இருந்து உள்ளே செல்ல பணியாளர்கள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை.

வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட சுரேஷை பார்க்க அவரது மகன் சந்தன் வந்துள்ளார். ஆனால் வைத்தியசாலையில் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. எவ்வளவு முயன்றும் முடியாமல் போனது. திடீரென வைத்தியசாலையில் இருந்து அழைப்பை ஏற்படுத்திய சுரேஷ் பிரசாத் வைத்தியசாலையில் தனியாக இருப்பதாகவும், வீட்டிற்கு வர வேண்டும் போல் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மகிழ்ச்சியடைந்த சந்தன் தந்தையை அழைத்து செல்ல விரும்புவதாக வைத்தியசாலை நிர்வாகத்திடம் அழைப்பை ஏற்படுத்தி கேட்ட போது அவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் மனமுடைந்த சந்தன் எப்படியாவது தந்தையை பார்க்க விரும்பினார். வைத்தியசாலையில் கொரோனா வார்ட்டில் பணிபுரிய விரும்புவதாக தெரிவித்து வைத்தியசாலை நிர்வாகிகளுடன் பேசி சம்மதம் வாங்கியுள்ளார்.

உங்கள் மொபைலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஓர் செயலி. இலவசமாக எங்கேயும், எப்போதும் பாடல் கேட்டு மகிழுங்கள். 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், Play store மற்றும் Apple store இல் southradios எனத் தேடி Download செய்யுங்கள்.
Please Download this app and support us
👇🏽👇🏽👇🏽

Click Here to Download Android app👉🏽👉🏽

Click Here To Download IOS App👉🏽👉🏽

சந்தனின் தந்தை கொரோனா நோயாளி என தெரியாத நிர்வாகமும் அனுமதி அழித்தது. மற்றவர்கள் 8 மணி நேர பணி புரிய சந்தன் சுமார் 16 மணி நேரம் பணி புரிந்துள்ளார். கழிவறைகள் சுத்தம் செய்வது, நோயாளிகளின் கழிவுகளை அகற்றுவது என அனைத்தையும் செய்த சந்தன் தந்தைக்கு அனைத்து சேவைகளையும் செய்தார்.

சந்தன் தொடர்ந்து 6 நாட்கள் தந்தையுடனேயே இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிர் இழந்தார். அதன் பின் வைத்தியசாலை நிர்வாகத்திடம் உண்மையை கூறிய சந்தன், மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன் தன்னை தனிமை படுத்திக் கொண்டுள்ளார். இந்த சம்பவத்தை வைத்தியசாலை நிர்வாகமும் மக்களும் பாராட்டி வருகின்றனர்.!