" "" "

உங்கள் உணவுக் குடல் பாதிக்கப் பட்டுவிட்டதா என்பதை இந்த அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்..! அதிகம் பகிர்ந்து அனைவருக்கும் தெரியப் படுத்துங்கள்…!!

எமது உடலில் எமக்கு தெரிந்து சில பாதிப்புகள் இருக்கும் தெரியாமல் பல பாதிப்புகள் இருக்கும்.அப்படி தெரியாமல் இருக்கும் பாதிப்புகளால் தான் பின் நாட்களில் அதிகம் பிரச்சனைகள் வருகின்றது. இன்று நாம் பார்க்கப் போவது வயிற்றில் இருக்கும் உணவுக் குடல் பாதிப்பு பற்றியது தான்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

வயிற்றுக்குள் இருக்கும் குடல்கள் தங்கள் வேலையை சரியாக செய்கிறது ஆனால் அதில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் எமக்கு சில அறிகுறிகள் தோன்றிவிடும். இப்போது உணவு குடல் பாதிக்கப் பட்டிருகின்றது என்பதை எப்படி அறிந்துகொள்ளகூடிய அறிகுறிகளை பார்க்கலாம்.

முதலில் அடி வயிறு வலி அல்லது யாரோ இழுத்து பிடிப்பது போன்ற உணர்வு இது தொடர்ந்தால் உணவு குடல் பாதிக்கப் பட்டிருப்பதாக அர்த்தம், அடுத்து மலம் கழிக்கும் போது ஏற்படும் வலி, இரத்தம் போவது போன்றவை, அடுத்து நாற்றம் நீங்கள் கழிவறை சென்றாலே வீட்டில் உள்ளவர்கள்

எல்லோரும் மூக்கை மூடும் அளவிற்கான நாற்றம் ஏப்பம்.வயிற்றுவலி.வயிற்றுப்போக்கு உணவு குடல் பாதிப்புக்கான அறிகுறி அதே போல், வாய்த் தொல்லை. அதிக காற்று வெளியேறுதல், உணவு உண்ன முடியாமல் போதல், உணவு எடுத்துக் கொண்ட பின் குமட்டல், போன்றவை இருந்தால் கண்டிப்பாக வைத்தியரை நாட வேண்டும்.

இவை சாதாரண விடயம் என நாம் நினைத்துக் கொண்டிருக்க இதுவே மிக பெரிய நோயாக மாறிவிடுகிறது. இதனால் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகின்றோம்.அதனால் இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ளவும். இந்த டிப்ஸ் உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.!