" "" "

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் உருவ சிலையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.!!

இலங்கையின் 73வது சுதந்திர தினம் இன்றாகவும். பல இடங்களில் மக்கள் சுதந்திர தினத்தை கொண்டாட மறுத்து வருகின்றனர். அத்துடன் அரசுக்கு எதிரான ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுதந்திர தினமான இன்று இலவச கல்விக்கான மாணவர் இயக்கம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இணைந்து கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதில் உயர்தர பரீச்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு நீதியை வழங்குமாறு கோஷம் எழுப்பினர். உயர்தர மாணவர்களின் வெட்டுப்புள்ளிகளில் குழறுபடி செய்ததால் அவர்களின் கல்வி நடவடிக்கை கேள்வி குறியாகி உள்ளதாக குறிப்பிட்ட போராட்டக்காரர்கள்,

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.!!