" "" "

திடீர் கனமழை அறிவிப்பு மக்கள் பீதி

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம் தென்மேற்கு பருவமழையின் போது தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் ஒர் அளவு மழை பொழியும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் போதுமான அளவு இல்லை. அதனால் மிகுந்த குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை அடுத்து விவசாயிகளும், பொது மக்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். வழக்கமாக கேரளாவில் மே மாதம் இறுதியிலோ அல்லது ஜூன் மாதம் 5-ந்க தேதிக்குள் தான் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை 8-ந்தேதி கேரளாவில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் அதன்படி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தற்போது துவங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருவனந்தபுரம் கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் அருகில் இருப்பதால் தமிழகத்திலும் அந்த தாக்கம் இருக்கும் என்றும், தமிழகத்திற்கும் ஒரு சில இடங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை.. 
200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)