உலகின் சிறந்த கைத்தொலைபேசி வர்த்தக கண்காட்சி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இரத்து..!!

உலகின் சிறந்த கைத்தொலைபேசி வர்த்தக கண்காட்சி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அமைப்பின் ஏற்பாட்டாளர்கள் நேற்றைய தினம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

எதிர்வரும் 24 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை பார்ஸிலோனோவில் டீயசஉநடழயெ இந்த உலக கைத்தொலைபேசி வர்த்தக கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் இது போன்ற நிலையில், சீனாவில் தீவிரம் அடைந்து வருகின்ற கொடிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அந்த கண்காட்சி பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் – 19 என்ற கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,350 விடவும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வரை 1,113 மரணங்கள் அங்கு பதிவாகியிருந்தன.

மேலும் இந்த நிலையில், நேற்று மாத்திரம் 242 பேர் மரணித்துள்ளனர். அத்துடன், வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று வரை 48 ஆயிரத்து 206 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், சீனாவை தவிர்ந்த மேலும் 25 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 400 பேரளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.