அமெரிக்க – ஈரான் பதற்றம்; விமானப் பாதையை மாற்றிய இலங்கை உள்ளிட்ட நாடுகள்!

அமெரிக்கா – ஈரானிடையே பழிக்குப் பழி வாங்கும் விதமாக போர்ப் பதற்றம் தொற்றியுள்ள நிலையில், விமானப் பாதைகளை பல நாடுகள் மாற்றியுள்ளன.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ஈராக், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகள் மீது பறப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, இலங்கை அரசு ஈரான், ஈராக் வான்வெளியைப் பயன்படுத்த வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், சிங்கப்பூர் விமான நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளும் தமது நாட்டு விமானங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளன.

அதேவேளை, ஈராக்குக்குச் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டுமென இந்திய அரசும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.