கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர் வேறு ஆணுடன் தொடர்பு…!!! பின்பு நடத்த கொடூர சம்பவம்..!!

தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த குமரவேல் மற்றும் இவரது மனைவி 22 வயதுடைய பேச்சியம்மாள் இவர்கள் இவருக்கு 5 வயதுடைய அழகுவேல் மற்றும் 3 வயதுடைய மதியழகன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து பேச்சியம்மாள் ஜெயமணி என்ற பெண்ணுடன் பொள்ளாச்சி அருகே நல்லூர் மாகாளியம்மன் கோவில் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் தனது உறவினரான 19 வயதுடைய பிரகா‌‌ஷ் என்பவருடன் அவருக்கு தவறான பழக்கம் ஏற்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நல்லூருக்கு வந்த பிரகா‌‌ஷ், பேச்சியம்மாளுடன் வீட்டில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் சிறுவன் மதியழகன் வீட்டில் மயங்கி விழுந்ததாக கூறி அரசு வைத்தியசாலைக்கு பேச்சியம்மாள் மற்றும் பிரகாஷ் கொண்டு சென்றனர். அங்கு அந்த சிறுவனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதோடு சிறுவனின் முகம் உட்பட உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமம் அடைந்த மருத்துவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கு இடையில் இந்த தகவலை அறிந்த பிரகாஷ் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.

மேலும் இந்த சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுவனின் தாய் பேச்சியம்மாள் மற்றும் ஜெயமணி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் பிரகா‌‌ஷ் தான் மதியழகனை அடித்துக் கொன்றது தெரியவந்தது. அதையடுத்து தலைமறைவாக இருந்த பிரகாஷை பொலிசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், பேச்சியம்மாளுக்கும், எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதற்கு மதியழகன் இடையூறாக இருந்ததால் அவனை அடித்து கொன்றதாக கூறினார்.