காதலி மீது சந்தேகப்பட்டு கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற காதலன் …!!

மும்பையை சேர்ந்த 24 வயதுடைய விஜயகுமார் என்ற இளைஞனும் அதே பகுதியை சேர்ந்த 22 வயதுடைய சந்தியா என்ற இளம் பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதல் ஜோடி இருவருக்கும் திருமணம் நடைபெற ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு இடையில் சந்தியா தனக்கு ததுரோகம் செய்துவிட்டு வேறு ஒருநபருடன் பழகுவதாக சந்தேகப்பட விஜயகுமார், அவரை கொலை செய்து விட முடிவெடுத்துள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதற்காக சனிக்கிழமை அன்று ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். அப்போது சந்தியாவின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து விட்டு, விஜயகுமார் அங்கிருந்து தப்பியுள்ளார் மாலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கடப்பாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள், கதவை தட்டிப்பார்த்து விட்டு மாற்று சாவியை வைத்து கதவை திறந்துள்ளனர்.

உள்ளே சென்று பார்த்த போது சந்தியா சடலமாக கிடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சந்தியாவின் உடலை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேவேளையில் விஜயகுமார் தற்கொலை செய்து கொள்வதற்காக வேகமாக வந்த லொறியின் முன் பாய்ந்துள்ளார். ஆனால் கால் முறிவுடன் உயிர் தப்பியுள்ளார். அதையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார், சிகிச்சை முடிந்ததும் கைது செய்தனர்.