" " " "

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனையை நிராகரித்து நாட்டுக்குள் வரும் அமெரிக்க அதிகாரி!

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் PCR பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்துள்ளார். இராஜதந்திர சிறப்புரிமையின் கீழ் பரிசோதனையை முன்னெடுக்காது அவர் அங்கிருந்து வௌியேற அனுமதிக்கப்பட்டதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜிவ் சூரிய ஆராச்சி ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் குறித்த தூதரக அதிகாரி இன்றைய தினம் அதிகாலை 1.30 மணி அளவில் விமான நிலையத்தை வந்தடைந்தார். அதேநேரம், தமது இராஜதந்திர பணியாளர்கள் இலங்கைக்கு வருகை தரும் போது, இராஜதந்திர உறவுகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாடுகள், தரங்கள் மற்றும் வழி முறைகள் பின்பற்றப்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்த்துள்ளது.