கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பம்…!!!!

கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய மறுசீரமைப்புத் தொடர்பாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விமான நிலையத்தின் முக்கிய அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில் பயணிகள் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டியிருப்பதாக அதிகாரிகள் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்கு அமைச்சர் அந்த சந்தர்ப்பத்தில் பஸ் சேவை ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அத்துடன் 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை இந்த பஸ் சேவை நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று பார்வையிட்ட அமைச்சர், விமான நிலையத்தை நவீன மயப்படுத்துவதற்காக கடந்த அரசாங்க காலப்பகுதியில் வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தம் இரண்டு வருட காலத்திற்குள் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார்.

அதனால் இந்த ஒப்பந்தத்தைப் பெற்ற நிறுவனத்திற்கு தண்டப்பணம் விதித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, வேறொரு நிறுவனத்திற்கு வழங்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.