" "" "

பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன்..!!! ஆந்திர மாநிலத்தில் அரங்கேறிய கொடூரம்..!!

ஆந்திர மாநிலத்தில் வசிக்கும் பெண் ஒருவர் வெங்காயத் தட்டுப்பாட்டை போக்க குண்டூரில் அரசு சார்பில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே தனது 5 வயது மகளை தனியாக வீட்டில் விட்டு குறித்த பெண் வெங்காயம் வாங்கி வர சென்றுள்ளார். தாய் வெளியில் சென்றதும், அருகில் இருந்த வீட்டிற்கு டிவி பார்க்க அந்த சிறுமி சென்றுள்ளார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அப்போது அங்கிருந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16-வயது மாணவன் ஒருவர் சிறுமியின் வாயில் துணியைஅடைந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புகாரின் பேரில் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ், பொலிஸார் கைது செய்தனர்.

நாட்டையே உலுக்கிய தெலங்கானா பெண் கால்நடை மருத்துவர், பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் எதிரொலியாக, பாலியல் குற்றவாளிகளுக்கு 21 தினங்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் திஷா சட்டம், ஆந்திர மாநில சட்டப்பேரவையில் அன்மையில் நிறைவேறியது. மேலும் இந்த சட்டம் நிறைவேறிய பின்னர் நடந்துள்ள முதல் கைது சம்பவம், இது என்பதும் குறிப்பிடத்தக்கது.