டாக்டர் பிரியங்காவின் மரணத்தின் பின் குடும்பத்தினர் எடுத்த அதிரடி முடிவு..! வாசலில் தொங்கவிடப்பட்டுள்ள அறிவிப்பு பலகை..!!

கால்நடை மருத்துவர் பிரியங்கா கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 20 வயதிற்கு குறைவான 4 இளைஞர்களால் கொடூரமான முறையில் பிரியங்கா கற்பழிக்கப் பட்டதுடன் பிளாஸ்டிக் பாயில் சுற்றி பெற்றோல் ஊற்றி எரிக்கப் பட்டிருந்தார். கொடூரர்கள் நால்வரும் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள நிலையில்..

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உட்பட முக்கிய மந்திரிகள் சிலர் பிரியங்காவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிச் சென்றனர். இதனை தொடர்ந்து சில கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்கள் அரசியல் விளம்பரத்திற்காக பிரியங்காவின் வீட்டை நோக்கி படை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் மீடியாக்களும் தங்கள் சுய நலத்திற்காக பிரியங்காவின் மரணத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனை அடுத்து பிரியங்காவின் பெற்றோர் மற்றும் கிராம வாசிகள் அதிரடி முடிவெடுத்துள்ளனர். எங்களுக்கு உங்கள் ஆறுதலோ பணமோ தேவையில்லை. என் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்.

“எங்கள் வீட்டிற்குள் அரசியல்வாதிகள், மீடியாக்கள், போலீஸ்காரர்கள் வருவதற்கு தடை” என்று மிகப்பெரிய போர்ட் ஒன்றையும் மாட்டியுள்ளனர். இதற்கு பிரியங்காவின் கிராம மக்களும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இந்த பெற்றோரின் செயலை அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது..!!