திருமண கட்-அவுட்டில் இப்படியொரு வசனமா?

தற்போதைய நவீன உலகில் எந்தவொரு நிகழ்வையும் நகைச்சுவையோடு செய்வது வழமையாகிவிட்டது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அதிலும், திருமண நிகழ்வுகளில் நகைச்சுவை அதிகம் தேங்கியிருக்கும்.

இதேபோன்றதொரு நிகழ்வு, தமிழகத்தின் சேலம் – மேட்டூரில் நடந்தேறியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரின் மாசிலாபாளையம் பகுதியைச் சேர்ந்த ஹெலன் சிந்தியாவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவருக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி திருமணம் நடக்கவுள்ளது.

இந்நிலையில், மணமகனின் உறவினர்கள் வித்தியாசமான கட்-அவுட் ஒன்றை வைத்துள்ளனர்.

அதில், திருமண விழா என்று போடக்கூடிய வசனத்துக்குப் பதிலாக “வாலிபர் கைது” என்றும், அவர் செய்த குற்றம் பெண்ணின் மனதைத் திருடியது என்றும், தீர்ப்பு மனதைத் திருடிய பெண்ணை திருமணம் செய்வது என்றும் இடம்பெற்றிருந்தது.

இந்தக் கட்டவுட்டை வைத்து சமூகவலைதள வாசிகள் தமது வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் அது வைராகியுள்ளது.